அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம்
வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?
கள்ளக்குறிச்சி
மாவட்டம் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மையத்திற்கு
தினந்தோரும் 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆதார் திருத்தம், புதிய ஆதார் பதிவு செய்ய
வந்து செல்கின்றனர், தற்போது கொரானா மூன்றாம் அலை பாதுகாப்பிற்காக தமிழக அரசின் சார்பில்
பல்வேறு வகையில் விளம்பரம் செய்தும் தடுப்பூசிகள் அனைவருக்கும் போடும் பணியில் துரிதமாக
செயல்பட்டுவரும் நிலையில் சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும்
ஆதார் சேவை மைய ஊழியர் ஆதார் பயன்பாட்டிற்காக வரும் பொது மக்களை காலையிலேயே வந்து டோக்கன்
போட வேண்டும் என கூறுவதால் மக்கள் காலை 7 மணியிலிருந்தே வட்டாட்சியர் அலுவலகத்தில்
காத்துக்கிடந்து ஊழியர் வந்ததும் மொத்தமாக ஒரே நேரத்தில் விண்ணப்பம் கொடுக்க கூட்டமாக
அலுவலக வாசலில் நிற்பதும் அலைமோதுவதும், அவர்கள் விண்ணப்பத்தினை கூட்டத்தின் நடுவே
மாஸ்க் கூட அணியாமல் நின்றுகொண்டு டோக்கன் 40 நபர்களுக்கு மட்டும் தான் என கூறி டோக்கன்
போடுவதும் மற்றவர்களை திரும்ப போகச் சொல்வதாலும் மக்கள் விரக்தியிலேயே திரும்புகின்றனர்
தொடர்ந்து இது போன்ற சூழல் நிலவுவதால் மக்கள் ஆதார் சேவை மீது வெருப்புனர்வை ஏற்படுத்தியுள்ளது
வருவாய் வட்டாட்சியர் அலுவகத்தில் நுழைவு வாயிலிலேயே சமூக இடைவெளியின்றி பொது மக்கள்
கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்காமல் சிறு சிறு கடைகள் நடத்தி வருபவர்களை மட்டும்
வட்டாட்சியர் அரசின் விதிமுறைகளை பின்பற்ற கடுமை காட்டுவது எந்த வகையில் நியாயமென கேள்வியை
எழுப்பியுள்ளது மேலும் கொரானா பேரழிவு காலங்களில் முகக்கவசம் அணியாமல் ஆதார் சேவை தேவைக்காக
கூடும் மக்கள் மத்தியில் நின்று கொண்டு டோக்கன் விணியோகம் செய்வதும் அவற்றை வட்டாட்சியர்
கண்டுகொள்ளாததும் கொரானா தொற்று அதிகரிக்கும் ஆபத்து உள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்ட
நிர்வாகம் மற்றும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்குமா? என பொது மக்களும் சமூக ஆர்வலர்களும்
கவலை தெரிவித்து வருகின்றனர்.
சையது
ஹசன்ஷாஅலி
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்