பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளத்திற்கு கிடைத்த சாலை தற்போது சாலையோரமாக பைப் லைன் அமைப்பதற்காக குழி தோண்டி சேதம்....
தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளத்திலிருந்து அறிவான்மொழி செல்லும் சாலை கடந்த 15 வருடங்களாக போடப்படாமல் இருந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு சாலை அமைக்கப்பட்ட நிலையில் தற்போது சாலையோரமாக பைப் லைன் அமைப்பதற்காக குழி தோண்டுகின்றனர். அவர்கள் அப்படி தோன்றும் குழியானது சாலையை ஒட்டியே உள்ளது. மேலும் பெரும்பாலான இடங்களில் ஜேசிபி இயந்திரத்தினால் சாலை பழுதடைந்துள்ளது. இதுகுறித்து குழி தோன்றுகின்ற போதெல்லாம் நெடுஞ்சாலைத்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் இன்றும் அறிவான் மொழி ஊரில் சாலையை ஒட்டியும் சாலையிலும் குழிதோண்டி கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் பல வாகனங்கள் விழுந்து எழும்பி வரும் நிலையில் மேலும் மேலும் சாலையை ஒட்டியே குழி தோண்டுவதால் அதனால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே புதிய சாலையை சேதமாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைக்கவும், சாலையோர பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோ.செங்கோல் மணி
மாவட் நிருபர் தூத்துக்குடி மாவட்டம்..
No comments:
Post a Comment