தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகண திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது....
8 இரு சக்கர வாகணங்கள் பறிமுதல் . தென்காசி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை . தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின்பேரில் தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மாதவன் ,மாரிமுத்து, தனிப்பிரிவு தலைமை காவலர் முத்துராஜ் மற்றும் குற்றபிரிவு காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே தென்காசி உதவி ஆய்வாளர் மாதவன் மற்றும் மாரிமுத்து தலைமையிலான தனி படை காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தை மறித்து தணிக்கை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததால் அவர்களை காவல் நிலையம் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஊர்மேலழகியான் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் மற்றும் முத்துக்குமார் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் தென்காசி, கடையநல்லூர், சுரண்டை, ஈரோடு ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடுவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்...
No comments:
Post a Comment