தென்காசி மாவட்ட ஆட்சியர் வாக்காளர் பட்டியல் வெளியிட்டார்

தென்காசி மாவட்ட ஆட்சியர் வாக்காளர் பட்டியல் வெளியிட்டார்...



தென்காசி மாவட்ட ஆட்சியர் திருசமீரன் அவர்கள் வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டார்.   தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில்( தனி) வாசுதேவநல்லூர்(தனி) கடையநல்லூர், தென்காசி மற்றும் ஆலங்குளம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன   14.02.2020 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி மொத்த வாக்காளரின் எண்ணிக்கை '13'03.308 ஆகும் ,  இதில் ஆண் வாக்காளர் 6,40.488 ,பெண் வாக்காளர் 6,62,764 மூன்றம் பாலின 56. நபர்கள் உள்ளனர்  அதன் பின் வாக்களர் பட்டியல் தொடர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதில் 31.10.2020 முடிய 3,438 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு 15,065 வாக்களர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   தற்போது மேற்  கண்டவாறு சேர்க்கை மற்றும் நீக்கம் செய்யப்பட்ட பின்,மொத்த வாக்காளர் 12, 91, 681 ஆகும்.   இதில் ஆண் வாக்காளர்கள் 6,34 450, பெண் வாக்காளர் 6,57 191 மூன்றாம் பாலின வாக்காளர்கள் 40 நபர்கள் உள்ளனர்   இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி நவம்பர் மாதம் 21 11.2020 மற்றும் 22 11 2020 ஆகிய தேதிகளிலும் டிசம்பர் மாதம் 12.12.2020 மற்றும்13.12.2020 ஆகிய தேதிகளிலும் வாக்களர் சேர்க்கை  திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது   01.01 2021 ஐ தகுதி நாளாகக் கொண்டு மேற்படி தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்களும்  விடுபட்ட வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க படிவம்- 6-ம் நீக்கம் செய்யு படிவம் 7-ம் திருத்தம் செய்ய படிவம் - 8-ம்   மற்றும் ஒரே தொகுதிக்குள்  மாற்றம் செய்ய படிவம் - 8 A.-ம் அந்ததந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில்  பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்   மேலும் www.nvsp.in என்ற தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்தார்.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர்


A. கோவிந்தராஜ்..


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...