யார் இந்த வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி .....
வேலூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட K.P முருகன் காங்கிரஸ் தலைவர்-பத்மாவதி அவர்களுக்கு மூத்தபுதல்வர் P.M. சுந்தரமூர்த்தி.M.A.,M.L., ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கொத்த கோட்டை ஆரம்ப பாடசாலையில் பயின்றவர்.ஆறாம் வகுப்பு முதல் 12ஆம்வகுப்புவரை வாணியம்பாடி கன்கார்டியாமேல்நிலைப் பள்ளியில் படித்தவர். பிஏ வரலாறு இஸ்லாமிய கல்லூரி வாணியம்பாடியில் படித்தவர். பி.எல் சட்ட இளங்கலைப் படிப்பை சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் 2003 முதல் 2006 ஆம் ஆண்டு வரை படித்தவர். எம். ஏ வரலாறு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தவர். எம்.எல் முதுகலை சட்டப்படிப்பை டாக்டர் பி ஆர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்தில் பயின்றவர் பன்னாட்டு சுற்றுப்புற சூழல் சட்டபடிப்பை முடித்தவர். 2006 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதியில் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தன் பணியை துவக்கினார் மேலும் பல்வேறு பொதுநல வழக்குகளிலும் மற்றும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கு ஆகும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நடத்துகின்ற அத்தனை போராட்டங்களிலும் தன் ஆளுமையைநிரூபித்துகொண்டிருந்தார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின்ஆளுமைமிக்க பேச்சாளராக செயல்பட்டு செய்தித் தொடர்பாளராக விளங்கி வந்தார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தேர்தல்களிலும் பங்கேற்று தன் சிறப்பான பணியை ஆற்றினார். வழக்கறிஞர்களின் பிரச்சனைகளுக்காக நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் குரல் கொடுக்காத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதன் கர்ஜனை குரலால் எதிரொலிக்கும. சட்டப் புலமையும், சட்ட அறிவையும் பார்த்து பெருமை கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு மத்திய அரசு வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2015ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டு காலத்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். பாபாசாகேப் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் எண்ணங்கள் முழுமையாக நிறைவேற்றும் பொருட்டு தனக்கே உரிய பாணியில் அவர் கையாண்ட விதமும், அவரின் சட்ட புலமையும் மத்திய அரசும் சென்னை உயர்நீதிமன்றமும் மிகவும் பெருமை கொண்ட தருணங்கள், நெஞ்சில் நீங்காத நினைவுகள், மக்கள் பிரச்சினைகளுக்காக, வழக்கறிஞர்களின் பிரச்சினைக்கும், நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்தில் குரல் கொடுக்க கொஞ்சமும் தயக்கம் இல்லாத ஆளுமை கொண்ட ஒரு சிறந்த வழக்கறிஞர் என்பதை நாடே அறியும். அவரின் கண்ணியமான செயல், நேர்கொண்டபார்வை, லஞ்ச லாவண்யம் ஊழல் வழக்குகள் எதுவும் தன்னிடம் நெருங்காத நெருப்பாற்றில் கொண்ட நேர்கொண்ட சிந்தனையும். எண்ணத்தையும் கொண்ட, அவருடைய செயல்பாடுகள் முழுமையும் அறிந்து, தேசிய சட்ட ஆலோசகராக அகிலஇந்திய இலஞ்ச ஊழல் ஒழிப்பு கூட்டமைப்பின் சார்பில் இந்தியா முழுமைக்கும் அவருடைய சட்டப்பணிகள் விரிவடைந்து வருகின்றன. தமிழகரசு அவரின் கண்ணியத்தையும், கௌரவத்தையும், மேம்படுத்தும் வகையில் விஜிலன்ஸ் கமிட்டியின் வழக்கறிஞராக தமிழக அரசு( 2019) நியமிக்கப்பட்டிருப்பது தன் வழக்கறிஞர் தொழிலுக்கும் கௌரவத்தை ஏற்படுத்துகிற செயலாகவே இது கருதப்படுகிறது. பாபாசாகேப் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் எண்ணங்களை முழுமையாக நிறைவேற்றும் வண்ணம் செயல்படுகின்ற செயல்கள் இந்திய அரசியலமைப்பின் ஆளுமை தன்மையும் சட்டபுலமையும்,முழுமையாகதாழ்த்தப்பட்பிற்படுத்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட,நசுக்கப்பட வஞ்சிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கும். மகளிர்மேம்பாட்டிற்காகவும், இளைஞர்ளக்கும் தொடர்ந்து அவர் செயல்பட இலவச சட்ட ஆலோசனை மையம். பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் முழுமையாக இலவசமாக மக்கள் பிரச்சினைகளை சட்டரீதியாக தீர்க்கின்ற செயல் உண்மையில் பாபாசாகேப் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் எண்ணங்களில் உருவான சிந்தனை நாம் பார்க்கின்ற இன்னொரு பாபாசாகேப் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் எண்ணங்களை நிறைவேற்ற வருகை தந்த அவரின் ஆன்மா என்று நாம் அவரை பாராட்டுவோம். தேசிய மக்களாட்சி சார்பாக வாழ்த்துகிறோம்...
ஆசிரியர்...
No comments:
Post a Comment