அயராமல் உழைக்கும் இரும்பு மனிதர் முக ஸ்டாலின்...
ஸ்டாலின் என்றால் ரஷ்ய மொழியில் இரும்பு மனிதர் என்ற பொருள் உண்டு ஆம் உண்மைதான் மு க ஸ்டாலின் இரும்பு மனிதராக இருந்ததால்தான் நெருக்கடி நிலை காலகட்டத்தில் கொடும் சிறைவாசத்தை தேடிச்சென்று ஏற்றுக்கொண்டார் ஸ்டாலின் பிறந்தபோதே இவர் தான் தன் அரசியல் வாரிசு என கலைஞர் தீர்க்கதரிசனமாக உணர்ந்து விட்டாரோ என்னவோ ஒரு மாபெரும் புரட்சியாளரின் பெயரை அவருக்கு சூட்டி விட்டார் மக்கள் மீதும் அரசியல் பணி மீதும் மாறா பற்றுக் கொண்ட முக ஸ்டாலின் BA அரசியல் படித்தார் பெரியார் அண்ணா கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் அரசியல் பல்கலைக்கழகத்தில் மாணவரான ஸ்டாலினுக்கு அரசியல் பாடத்தை விட அரசியல் அனுபவமே நிறைய கற்றுக்கொடுத்தது. தன் தந்தையை போலவே பல்துறை திறன் கொண்டவராவார் முக ஸ்டாலின்கவிதை கட்டுரை மேடைப்பேச்சு திரைப்பட நடிகர் திமுக கொள்கை விளக்க நாடகங்களில் அடித்த அனுபவம் என பல துறையிலும் அவருக்கு அனுபவம் உள்ளது இன்றைய அரசியலில் அண்ணா கலைஞர்பெரும் தலைவர்களோடு கற்ற அனுபவமும் ,ஆளுமைத் திறனும் கொண்ட தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் மட்டுமே. தனக்கு தலைவர் கலைஞர் வாய்ப்பு கொடுத்த மேயர், MLA, அமைச்சர்,துணை முதல்வர் என எல்லா பொறுப்புகளிலும் சாதனை படைத்து உழைப்பு உழைப்பு உழைப்பு அதற்கு மறு பெயர்தான் ஸ்டாலின் என கலைஞரின் வாயாற பாராட்ட பட்டவர் இன்றைய தலைவர் முக ஸ்டாலின்.
AR ஜாபர் தலைமை செய்தியாளர்
No comments:
Post a Comment