தென்காசி மாவட்ட. ஆட்சியரிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தினர் கோரிக்கை மனு...
3கிராமங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுகாதாரநிலையம்,கழிப்பிடவசதி,கழிவுநீர் செல்லும் வசதி செய்து தர வேண்டி ஆகிய மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாவட்ட தலைவர் தமிம் அன்சாரி கோரிக்கை மனு கொடுத்துள்ளார் இவ்மனுவில் கூறிருப்பதாவது. 1) விகே.புதுர் தாலுகாவை சேர்ந்த ஆனைகுளம் கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சியில் 3 ஊர்கள் இருந்தாலும் ஓரு ஆரம்ப சுகாதார நிலைய வசதி கூட இல்லை. அவசர மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு அருகில் உள்ள குலையனேரி மற்றும் சுரண்டை செல்ல வேண்டியுள்ளது. இரு ஊர்களுக்கும் பஸ் வசதி மிக மிக குறைவு மேலும் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பஸ் வருவதனால் அவசர மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு முடியாமல் மக்கள் சிரமத்துகுள்ளாகி வருகிறார்கள். அவசர மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனை செல்வதற்கு ஆட்டோவில் தான் செல்ல வேண்டியுள்ளது . ஆகயினால் ஆனைக்குளம் ஊராட்சியில் புதிய மருத்துவமனை அமைத்து தரும் படி கேட்டு கொள்கிறோம். 2) ஆனைகுளம் ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் ஓரு சில மகளிர் கழிப்பிட கட்டடங்கள் இருந்தாலும் அவை முழுமையாக செயல் படாமல் பழுதாகிய நிலையில் உள்ளது அதனையும் செயல் பாட்டுக்கு கொண்டு வந்து கூடுதலாக சில கட்டிடங்கள் கட்ட வேண்டிய தேவையுள்ள இடங்களை தேர்வு செய்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் பெற செய்ய படி கேட்டு கொள்கிறோம். 3) மேலும் மூன்று கிராமங்களிலும் கழிவுநீர் செல்வதற்கான முறையான வழிதடங்கள் இல்லாததால் ஓவ்வொரு தெருவிலும் சாக்கடை நீர் தேங்கி பொது சுகாதார கேடு ஏற்படுகின்றது. இதனை சரி செய்து தரும்படி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக கேட்டு கொள்கிறோம் என்று மனுவில் கூறியுள்ளது.
ஆசிரியர்..
No comments:
Post a Comment