புதிய பூங்காவை திறந்துவைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..
தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே முஸ்தபா பார்க் என்ற ஒரு பழமையான பூங்கா பல வருடங்களாக பயன்பாட்டில் இல்லாமல் முட்புதர்களாக நிறைந்து இருந்தது.இதை சில சமூக விரோதிகள் தங்களின் பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்தனர். இதனை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று செங்கோட்டை காவல்துறை மற்றும் மழை நண்பர்கள் குழு சார்பாக முடிவெடுக்கப்பட்டு காவல்துறையினர், மழை நண்பர்கள் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து பூங்காவினை சீரமைத்து அதன் சுற்று சுவர் முழுவதும் குழந்தைகளை கவரும் வகையில் வண்ண வண்ண ஓவியங்களாக வரைந்து அதனை இன்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS அவர்கள் திறந்து வைத்தார் ,பூங்காவினை அமைக்க உதவிய மழை நண்பர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் அதில் ஓவியங்கள் வரைந்த சிறுவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார் .மேலும் இந்த பூங்காவினை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினருக்கும் மழை நண்பர்கள் குழு உறுப்பினர்களுக்கும் தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்...
No comments:
Post a Comment