பொதுமக்களுக்கு இடையூராக இயங்கி வரும் கல் குவாரியை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தினர் கோரிக்கை மனு...
மூன்று அம்ச கோரிக்கை வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி மனு கொடுத்துள்ளார் இவ்மனுவில் கூறிருப்பதாவது. 1) ஆலங்குளம் தாலுகாவை சேர்ந்த ஆண்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இராமநாதபுரத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அதன் அருகில் உள்ள கல் குவாரில் பாறையை உடைக்க வெடி சத்ததினால் இருதய நோயாளிகள் பாதிப்படைகின்றனர் .ஐயா அவர்கள் தயவு கூர்ந்து இந்த கல் குவாரியை அகற்ற உத்தரவு இடும்படி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம். 2) வீகே.புதுர் தாலுகா கழுநீர்குளம் ஊராட்சியை சேர்ந்த அத்தியூத்து முப்புடாதி அம்மன் கோவில் கீழதெருவில் கழிவுநீர் தேங்கியுள்ளது . தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் தெருக்கலில் சாலை வசதிகளையும் செய்து தரும் படி கேட்டு கொள்கிறோம். 3) கடையம் ஓன்றியத்தை சேர்ந்த அஞ்சாங்கட்டளை ஊராட்சியில் அருந்தியர் காலனியில் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த குடும்பங்களுக்கு நடந்து செல்லும் பாதை சரியில்லாமல் நடந்து போகவே வழியில்லாமல் மிகவும் சிரமத்துகுள்ளாகி வருகின்றனர். அவர்கள் நடந்து செல்ல பாதையை அமைத்து தரும் படி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்தநிகழ்வில் மாவட்ட தலைவர் தமிம் அன்சாரி, அயோத்தி ராமர், அரிசந்திரன், மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்..
No comments:
Post a Comment