தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இளம் பெண்ணை ஏமாற்றி வேறு பொன்னை திருமணம் முடிக்க சென்றதை தடுக்க முயன்ற பெண் தாக்கப்பட்டார்...
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா அருகே வயலிமிட்டா சிவஞானபுரம் பிள்ளையார் கோவில் தெரு, முனியாண்டி அவரது மகள் மாரியம்மாள் வயது -27 அதே ஊரே சார்ந்த ஆறுமுகம் மகன் ராமர் 27- இவர் மாரியம்மாளை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி 4 வருட காலமாக உல்லாசமாக இருந்து வந்துள்ளார் மேற்படி மாரியம்மாள் 2.மாதம் கார்பம்மாகி பாளையங்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கருவை கலைத்துள்ளர்கள் மேற்படி ராமர் வேறு ஒரு உறவினர் பெண்ணை திருமணம் செய்ய போவதாக தெரிந்தவுடன் கரிவலம் வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் இரு தரப்பையும் விசாரணை செய்து மாரியம்மாளிடம் மிரட்டி எழுதி வாங்கியதாகவும் மறுநாள் திருமணத்தை தடுத்து நிறுத்த சென்ற மாரியம்மாளை இராமர் மற்றும் அவரது உறவினர்கள் அடித்தும் கொலை மிரட்டல் விட்டும் செய்துள்ளனர் தகவல் அறிந்து பலத்த காயங்களுடன் பாதிக்கப்பட்ட மாரியம்மாளை ஆதிதமிழர் கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் S.பெருமாள், கருப்புவேங்கை, முருகன் ஆகியோர் மாரியம்மாளை மீட்டு சங்கரன்கோவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிவகிரி காவல் நிலைய காவல்துறையினர் விசரணை செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்...
No comments:
Post a Comment