தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்க உறுப்பினர்கள் சார்பாக புயல் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்க உறுப்பினர்கள் சார்பாக புயல் நிவாரணப் பொருட்கள் விநியோகம்....



செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் சதுரங்கப்பட்டினம் கிராம தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு,  மக்கள் உரிமை இயக்க உறுப்பினர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் இணைந்து நிகர் புயல் மற்றும் புரெவி புயலின் தாக்கத்தால் வீட்டு கூரைகளை இழந்து கன மழையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சதுரங்கப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கும் மேலும் மகாபலிபுரம் வெண்புருஷம்  கிராமத்தை சேர்ந்த 5 இருளர் குடும்பங்களுக்கு தற்காலிகமாக மழையில் இருந்து காத்துக் கொள்ளும் பொருட்டு தார்ப்பாய் கள் வழங்கப்பட்டன. மேலும் மகாபலிபுரம் பகுதியில் புயலால் தொழில் நலிவடைந்த தெருக்கூத்து கலைஞர் மற்றும் செருப்பு தொழிலாளியின் குடும்பத்திற்கு மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்க உறுப்பினர்கள், மகாபலிபுர சமூக ஆர்வலர்கள் உடனிருந்தனர்.


 


ரஹமத்துல்லா கல்பாக்கம்..


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...