திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொரக்கொளத்தூர் கிழக்கு வனபகுதியில் பெயர்விலாசம் தெரியாத 30 வயது மதிக்கதக்க பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு முழுநிர்வாண நிலையில் பிணம்.
கலசபாக்கத்தை அடுத்த சொரகொளத்தூர் செல்லும் வழியில் ஒரு டாஸ்மாக் கடை எதிரே காப்புக்காடு பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள் கலசபாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். காப்புக்காட்டில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாணமாகக் கிடந்தார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும், இதனால் ஏற்பட்ட தகராறால் அவரை மர்மநபர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்யப்படுவதற்கு முன்பாக பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட மர்மநபர் காமவெறியால் பெண்ணின் உடல் பாகங்களை பல்லால் கடித்துள்ளார். அதற்கான அடையாளங்கள் பெண்ணின் உடலில் பல இடத்தில் இருந்தன.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுகுறித்து போலீசார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். திருவண்ணாமலையில் இருந்து மோப்பநாய் ‘மியா’ மற்றும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மோப்பநாய் பெண்ணின் பிணத்தை மோப்பம் பிடித்தவாறு சிறிது தூரம் ஓடியது. கைரேைக நிபுணர்கள் கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். மேலும் பிணம் கிடந்த இடத்தில் பெண்ணின் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் மேலாடை டாப்ஸ் ஆகியவை கிடந்தன. அதை போலீசார் கைப்பற்றி விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
கற்பழித்துக் கொலை?
கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவரை யாரேனும் கடத்தி வந்து காட்டில் வைத்து கற்பழித்துக் கொலை செய்தனரா? அல்லது பலரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடைக்கு நேர் எதிேர காப்புக்காட்டில் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்ததால் மதுப்பிரியர்கள் யாரேனும் குடித்துவிட்டு, போதையில் பெண்ணை கற்பழித்துக் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொரகொளத்தூர் காப்புக்காட்டில் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட செய்தியாளர் ராமதாஸ் திருவண்ணாமலை
No comments:
Post a Comment